பட்டத் திருவிழாவை உடன் ஒத்திவைக்கவும்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, கொரோனா, ஒமிக்ரோன் பரவி வரும் தற்கால சூழ்நிலையில் காலவரையின்றி உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட் டத் திருவிழா தொடர்பாக கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாட்டாளர்களுடன் நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலையில் நடத்த வேண்டாம் எனக் கூறியுள்ளேன். அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற் படுவார்களாக இருந்தால் வல்வெட்டித் துறை நகர சபை இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனைத் தடுக்க முற்படுவோம்” என்றார்.