231 Views
இந்தியா எல்லைக்குள் அத்துமீறி உள் நுழைந்த கிழக்கு மாகாண 4 முஸ்லீம் மீனவர்கள் கைது: இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்தமான் தீவு எல்லைக்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் இந்திய கடற்பையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தமான் தீவு அருகே ஓர் விசைப்படகில்இருந்த 4 முஸ்லிம்களே இவ்வாறு இந்திய கடறபடையினரால் கடலில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள
எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சென்னை துறைமுகத்தில் தற்போது மீனவர்களிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து புறப்பட்ட நீண்டநாள் விசைப்படகில் இருந்த முகமது றிவ்கான், முகமது றியால்,முகமட் கௌடர், முகமது ஹலில் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.