யாழ். காரைநகர் கடலில் வைத்து புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது

337 Views

புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது

யாழ்ப்பாணம் காரைநகரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு – புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் என்று தமிழ்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

Leave a Reply