மருத்துவத்துறை நெருக்கடியை சமாளிக்க உலக வங்கியிடம் இலங்கை கோரிக்கை

352 Views

உலக வங்கியிடம் இலங்கை கோரிக்கை

உலக வங்கியிடம் இலங்கை கோரிக்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையானது, மருத்துவத்துறையிலும் பெரும் நெருக்குவாரத்தை ஏற்படுத்தி வருவதையடுத்து இலங்கை அரசு உலக வங்கியிடம் உதவிகோரியுள்ளது.

இலங்கைக்கு தேவையான மருந்துப் பொருட்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரியுள்ளார்.

உலக வங்கியின் தெற்காசிய வலயம் தொடர்பான பணிப்பாளர் லினோ ஷேர்பன் பென்ஸ் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகளை நேற்று சந்தித்தபோதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

Leave a Reply