கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் வீதி விபத்துகளில் பலியாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். நம்ப முடியுமா? இந்நாட்டு மக்களில் மஞ்சள் கோட்டில் மற்றும் பெருந் தெருக்களில் 27,000 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரை 1,760 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகம் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள்தான் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துகின்றனர். அதனை பரிசோதிக்க எந்த உபகரணமும் இல்லை. அந்த உபகரணங்களை விரைவில் கொண்டு வருவோம். அவை சட்டப்பூர்வமானவுடன், எமக்கு கைது செய்ய முடியும். என்றார்.