கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை சென்ற பேரணி மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்து இலங்கை ஜனாதிபதி விவசாய அமைச்சர் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.
மேற்படி மகஜர்களை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார்.