சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ்” வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்றபோது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்த தேரர்கள் குழு கைது செய்யப்பட்டது.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு 110 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாகப் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் இது ஒரு பாரிய மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகக் கருதப்படுவதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



