20 ஐ ஆதரித்த 9 எதிரணி உறுப்பினர் நீக்கம் – அரச தரப்பில் ஆசனம் ஒதுக்க கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறும் லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் டயானா கமகே உள்ளிட்ட 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

20ஆவது அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் விவரம்:
டயானா கமகே, அருணா
சலம் அரவிந்தகுமார், இஷாக்
ரஹ்மான், பைஸல் ஹாசிம், எச்.
எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக்,
நசீர் அஹமட், ஏ.ஏ.எஸ்.எம்.
ரஹீம், எம்.எம்.எம். முஷாரப்
ஆகியோரின் பெயர் குறிப்பிடப்
பட்டுள்ளது.