இலங்கை: புதிய அமைச்சரவையில் இன்று 18 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சரவையில் 18 பேர்

புதிய அமைச்சரவை இன்று  பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஏப்ரல்-4-ம் திகதி அனைத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News