பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 173 சிறைக்கைதிகளுக்கு இன்று விடுதலை

107 Views

173 சிறைக்கைதிகள் இன்று விடுதலை

பௌத்தர்களின் புனித நாளான பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, 173 சிறைக்கைதிகள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், குருவிட்டை, மஹர, நீர்கொழும்பு, வாரியபொல, போகம்பறை, அனுராதபுரம், களுத்துறை, கொழும்பு மெகசீன் சிறைச்சாலை, தல்தென, வட்டரெக, பதுளை, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, பொலன்னறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேன, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல, திருகோணமலை மற்றும் வீரவில ஆகிய சிறைச்சாலை கைதிகளே விடுவிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply