384 Views
கொரோனா தொற்றுக்குள்ளான 130 கர்ப்பவதி தாய்மாரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்று குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டார்.
தொற்றுக்குள்ளான அதிகமான கர்ப்பவதி தாய்மார் முல்லேரியா, நெவில் பெர்னாண்டோ மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இயலுமானவரை வீட்டில் இருந்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு கர்ப்பவதிகளுக்கு குடும்ப நலசுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.