மாவீரர் வாரத்தை முன்னெடுக்க முல்லையில் 12 பேருக்குத் தடை

101 Views

மாவீரர் வாரத்தை முன்னெடுக்க முல்லையில் 12 பேருக்குத் தடைமுல்லைத்தீவில் மாவீரர் வாரத்தைக் கடைப்பிடிப்பதற்கு 12 பேருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவீரர் வாரத்தை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி 12 பேரின் பெயரைக் குறிப்பிட்டு பொலிஸார் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவை விசாரித்த நீதிபதி, மாவீரர் வாரத்தை முன்னெடுக்க முல்லையில் 12 பேருக்குத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன், த.யோகேஸ்வரன் உட்பட்டவர்களுக்கே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவுப் பத்திரங்கள் இன்று குறித்த பிரமுகர்களுக்கு கையளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply