மனோ கணேசன் எம்.பிக்கு கொரோனா

மனோ கணேசன் எம்.பிக்கு கொரோனா தொற்றுமனோ கணேசன் எம்.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த தனக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன் எனவும் மனோ கணேசன் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.