செம்மணி இனப்படுகொலை நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது

சிறிலங்கா இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான கிருசாந்தி குமாரசாமி, அவரது குடும்பத்தினர் உட்பட அங்கு கொன்று புதைக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கானவர்களின் 27வது வருட நினைவேந்தல் 07.09.2023 அன்று மாலை 4.30 மணிக்கு செம்மணி யாழ் வளைவிற்கு அண்மையாக நடைபெற்றது.

யாழ்குடாநாட்டை இலங்கை அரசு கைப்பற்றிய பின்னர் 1996 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.