சீனாவினால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி ஏற்றுமதி இலங்கைக்கு வந்துள்ளது.
1,000 மெட்ரிக் தொன் அரிசியை ஏற்றிய “சின் ஹொங்கொங்” கொள்கலன் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
100,000 அரிசி பொதிகள் இலங்கை மாணவர்களிடையே விநியோகிக்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சீனா 9,000 மெட்ரிக் தான் அரிசியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.