கனடாவுக்குச் சட்டமுரணாக செல்ல முயன்ற குற்றச்சாட்டில் 10 பேர் இந்தியாவில் கைது

இந்தியாவில் இருந்து  கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் உட்பட 10 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இலங்கையர், சென்னையில் வசிப்பவர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், ஏனைய 9 பேர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளதால், அவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அதற்கமைய, அவர்களை  காவல்துறையினரிடம் அழைத்துச் சென்று தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.