வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இடையே சந்திப்பு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சப்ரி தற்போது உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பிளிங்கனைச் சந்திப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் சப்ரி, இலங்கையும் அமெரிக்காவும் நீண்டகாலப் பங்காளிகள் – 75 வருட இராஜதந்திர உறவு – கிட்டத்தட்ட சுதந்திரம் பெற்ற காலமாகும்.

அமெரிக்காவுடன் இலங்கை நல்லதொரு உறவைக் கொண்டுள்ளது என்றும், இலங்கையர்களுக்கு மிகவும் சோதனையான நேரத்தில் வழங்கப்பட்ட ஆதரவுக்காக அமெரிக்க மக்களுக்கும், பிடன் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும்  கூறினார்.

“குறிப்பாக உங்கள் மனிதாபிமான ஆதரவு – கடன்கள், மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் சிறந்த உறவுக்காகவும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியிலும் பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம். IMFஐ அணுகுவதற்கும், எங்கள் கடனை மறுசீரமைப்பதற்கும், எங்கள் EFFஐ விரைவில் பெறுவதற்கு விரைவில் குழுவிற்குச் செல்வதற்கும், எங்களை அனுமதிப்பதிலும், எங்களை எளிதாக்குவதிலும் முக்கியப் பங்காற்றிய உங்களுக்கும் திறைசேரிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,  இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் அமெரிக்காவும் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா 240 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவி மற்றும் கடன்களை வழங்கியதாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதற்கும், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் இருவரும் இணைந்து செயற்படுவதாகவும் எண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் சப்ரி, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.