விவசாயிகளை கைவிட்டது சிறீலங்கா அரசு

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் விவசாயிகள் மிகப்பெரும் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக யாழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் தொடர் ஊரடங்குச்சட்டம் யாழ் விவசாயிகளை மிகப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தமது விளைபொருட்களான தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் என்பவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் தென்னிலங்கையில் உள்ள விவசாயிகளும் தமது விளை பொருட்களை சந்தைப்படுத்த முடியாது, குறைந்த விலையில் விற்பனை வெய்வதாக அல்லது அவற்றை எறிவதாக சிறீலங்கா விவசாயிகள் சபையின் செயலாளர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

எம்பில்லிப்பிட்டியா, தம்புதெகமா, நுவரேலியா, தம்புள்ள கெபெற்றிபோல ஆகிய பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.