வியட்நாம்  அமெரிக்கா  போர்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை

வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய ‘ஏஜென்ட் ஆரஞ்ச்’ என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது.

வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்டு எழுதிய டிரான் டோ ங்கா என்ற 78 வயது வியட்நாமிய – பிரெஞ்சு பெண் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியை போரில் பயன்படுத்தியது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவித்ததாக அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஏஜென்ட் ஆரஞ்ச் பயன்படுத்தியதற்கு எதிராக பாதிக்கப்பட்ட குடிமக்களில் ஒருவரது வழக்கை நீதிமன்றம் விசாரணை செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – பிபிசி