வறுமையில் வாடும் 35.6 கோடி குழந்தைகள் – யுனிசெப் தகவல்

கொரோனா பரவுவதற்கு முன்னே உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை கொண்டு வந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பட்டினி சாவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவுவதற்கு முன்னே உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாகவும், அதாவது 6 குழந்தைகளில் ஒருவர் இந்த அவலத்தில் இருந்ததாகவும், தற்போதைய பொருளாதார சிக்கலால் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்திருப்பதாகவும் ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் மற்றும்  உலக வங்கி  வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

இந்த வறுமையை ஒழிக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் எனவும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.