வடமாகாண தேர்தல் கடமைகளை பொறுப்பேற்கும் வடக்கு முன்னாள் ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உத்தியோகபூர்வ அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸவை வெற்றியடையச் செய்வதற்காக, வடக்கு மாகாணத்தின் சகல தேர்தல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் அங்கத்துவத்தை நேற்றைய தினம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸவிடம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை, ஏனைய கட்சிகளைக் காட்டிலும் மிகவும் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த ரெஜினோல்ட் கூரேயை ஜனாதிபதி தேர்தலுக்கான வடமாகாணத்தின் சகல தேர்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு பொறுப்பாக நியமித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.