வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம்- ஐ.நா தகவல்

வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா.மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட டீக்ரே பிராந்தியத்திலும், அம்ஹாரா மற்றும் அஃபார் போன்ற பகுதிகளையும் சேர்த்து 3.5 இலட்சம் மக்கள் “கடுமையான நெருக்கடியில்” வாழ்ந்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில் டீக்ரே பேரழிவிற்கு உள்ளாகி இருக்கிறது. 17 லட்சம் பேர் தங்கள் சொந்த நிலங்களையும் வாழ்விடங்களையும் விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமையான யுனிசெஃப் உட்பட பல்வேறு அமைப்புகளும் இப்பிரச்சனையைக் குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.