வடகொரிய அதிபரின் புதிய சட்டம்

வடகொரிய அதிபரான கிம் ஜங் உன் அவ்வப்போது புதிய சட்ட நடவடிக்கைகளை பிறப்பித்து வருகின்றார். அவை விநோதமானதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கின்றன. தற்போது அமுல்ப்படுத்தியுள்ள சட்டத்திற்கமைய, வடகொரியாவில் உள்ள குழந்தைகள் ஒவ்வொரு நாளும் நாட்டின் தலைவர்கள்  பற்றி 90 நிமிடங்களாவது அறிந்து கொள்ள வேண்டும். இது வடகொரியாவின் புதிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இதற்கு முன்னர் வடகொரிய அதிபர் பற்றி அறிந்து கொள்வதற்கான வகுப்பில் 30 நிமிடங்களே கலந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அது 90 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 90 நிமிடங்களில் முன்னாள் வடகொரிய அதிபர்களான  Kim Il-Sung மற்றும் Kim Jong-il ஆகியோரின் குழந்தைப் பருவங்களைப் பற்றி ஒரு மணி நேரமும், 30 நிமிடங்கள் புரட்சிகர இசையைக் கற்க வேண்டும்.

மேற்படி கட்டளையை கிம் ஜங் உன் இன் சகோதரியான கிம் ஜோ ஜங் பிறப்பித்துள்ளார். சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பாலர் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இந்த மாற்றங்களை செய்துள்ளார். இந்தக் கல்வித் திட்டம் வடகொரியாவின் தலைமைக்கு விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என சியோலை தளமாகக் கொண்ட ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.