வங்கதேசத்தில் மசூதியில் எரிவாயு கசிந்து விபத்து

வங்கதேசத்தில் எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்காவின் நாராயங்கஞ்ச் நதி துறைமுகப் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை (04) இரவு குளிர்சாதனம் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறும் போது, மசூதியில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் மசூதியில் பரவிய தீ, அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பரவியது. இதில் 12பேர் பலியாகினர். 30இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

சம்பவம் குறித்து தீயணைப்புப் படையினர் கருத்துத் தெரிவிக்கையில். மசூதிக்கு அடியில் டைட்டாஸ் வாயுவின் குழாய் செல்கிறது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் குழழாயிலிருந்து கசிந்த வாயுவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். அப்போது குளிர்சாதனத்தை யாரேனும் அணைக்கவோ, இயக்கவே செய்யும் போது விபத்து நடந்திருக்கலாம் என்று கூறினார்.

விபத்து குறித்து காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.