யாழ். வலி.வடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் இராணுவத்தால் அபகரிப்பு

யாழ்ப்பாணம்- வலி.வடக்கிலுள்ள 10 குடும்பங்களின் காணிகளை, மீண்டும் கையகப்படுத்துவதற்கு இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான ச.சஜீவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ச.சஜீவன் மேலும் கூறுகையில், “கடந்த 27 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்தி கிராம சேவையாளர் பிரிவு, கடந்த 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது.

இதன்போது  விடுவிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை மீண்டும் கையகப்படுத்த இராணுவம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதாவது காணிகளின் உரிமையாளர்கள், தங்களின் காணிகளை துப்பரவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இராணுவத்தினர், குறித்த பகுதியில் உட்பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியென அறிவித்தல் பலகையொன்றினை இரவோடு இரவாக நாட்டியுள்ளனர்

ஆகவே இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தரையாட தீர்மானித்துள்ளோம்” என்றார்