யாழ்ப்பாணத்திலுள்ள 3 தீவுகளும் சீனாவுக்குத்தான் – இந்தியாவுக்கு இல்லை என்கின்றார் விமல்

வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம் குறித்த மூன்று தீவுகளிலும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் சீன நிறுவனத்துக்கே இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய அமைச்சரவையின் அனுமதியையும் மீறி மூன்று தீவுகளுக்கான திட்டங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோருவது சிறுபிள்ளைத்தனமானது என அமைச்சர் விமல் வீரவன்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிநாட்டுத் திட்டங்களுக்கான கோரிக்கையை இலங்கையிடம் விடுக்க முடியும். ஆனால், அது தொடர்பில் அமைச்சரவைதான் இறுதி முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.