மேலும் ஒரு லட்சம் சடலப் பைகளை கோருகின்றது அமெரிக்கா

கோவிட்-19 இனால் அமெரிக்க அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்துவரும் நிலையில் அமெரிக்க அரசு தற்போது மேலும் 100,000 சடலப்பைகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.

கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஈ.எம் ஒயில் ரான்ஸ்போட் நிறுவனத்திடம் இதற்கான கோரிக்கையை அமெரிக்க அரசு கடந்த மாதம் 21 ஆம் நாள் விடுத்துள்ளது. இந்த கொள்முதலின் பெறுமதி 5.1 மில்லியன் டொலர்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை 60,000 இல் இருந்து 70,000 ஆக இருக்கும் என கடந்த திங்கட்கிழமை (27) அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தபோதும், வெள்ளிக்கிழமை (1) இறப்பு எண்ணிக்கை 63,000 விட அதிகரித்துள்ளது.