மெக்ஸிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்ஸிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும். இது 7.4 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கத்தில் 6பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கையில், “மெக்ஸிக்கோவின் தென்பகுதியில் உள்ள ஒக்ஸாக்கா மாகாணத்தில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு 6பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மெக்ஸிக்கோவில் சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுவதாகவும், மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ஒரு நொடியில் நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் இரு வாரத்தில் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.