மூன்று oscar விருதுகளை வென்ற சீன இயக்குனரின் செய்திகளுக்கு தடை

Oscar விருது வழங்கும் விழாவில் இந்தாண்டு 3 பிரிவுகளில் Oscar விருது வென்ற நோமாட்லண்ட் ( NOMADLAND  ) படத்தை இயக்கிய சீனாவைச் சேர்ந்த  சோலே ஜாவோ(Chloé Zhao) குறித்த செய்திகளை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.

அண்மையில் நடந்த Oscar விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் NOMADLAND படத்தை இயக்கிய சோலே ஜாவோவுக்கு வாழ்த்து தெரிவித்து சீன மக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த 26ம் திகதி பதிவிட்டிருந்தனர். ஆனால் அன்றைய தினமே சோலே குறித்து பதிவிடப்பட்ட செய்திகள் அரசால் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊகவியலாளர் லி யுவான், சீன மக்கள் சோலே ஜாவோ Oscar வென்றது குறித்து கொண்டாடிக் கொண்டிருந்த போது, பெய்ஜிங் அவர் குறித்த செய்திகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2013ம் ஆண்டு சோலே ஜாவோ சீன அரசை விமர்சித்திருந்ததாலேயே இப்போது அவரது செய்திகள் நீக்கப்படுகின்றன” என்று  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீன அரசின் ஊடகங்களில் சோலே ஜாவோ குறித்த எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் மக்கள் அரசின் தணிக்கைக்குள்ளாகாத வகையில் வோலேவின் பெயரை ண்களில் குறிப்பிட்டு அவரது வெற்றியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.