‘மீண்டும் மிதக்கத் தொடங்கியது’ எவர் கிவன் கப்பல்

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டது.

இதன் காரணமாக  அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாமல் இருக்கும்  சூழல் ஏற்பட்ருந்ததோடு பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறைக்கு  முகம் கொடுத்தது.

இதையடுத்து குறித்த கப்பலை, அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. எனினும் 400 மீட்டர் நீளம், 200,000 தொன் எடை கொண்ட இந்த கப்பலை அகற்றுவது பெரும் சவாலாக  இருந்தது. ஆனால் கப்பலை மிக்க வைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக கடல்சார் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளும் ‘இன்ச்கேப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில்  தற்போது 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.