மியான்மார் தொடர்பான அனைத்துலக நீதி விசாரணைக்கு பிரித்தானியா உதவும்

மியான்மாரில் இருந்து பங்களாதேசத்திற்கு பெருமளவான ரோஹிங்கிய இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து சென்ற ஐந்தாவது ஆண்டு தினத்தை அங்கு முகாம்களில் வாழும் மக்கள் கடந்த வியாழக்கிழமை (25) நினைவுகூர்ந்துள்ளனர்.

பங்களாதேசத்தின் கொக்ஸ்பசார் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி இனஅழிப்பு நாளை நினைவுகூர்ந்தனர். மியான்மாரில் பாதுகாப்பான நிலை எற்பட்டால் தங்களால் நாட்டுக்கு திரும்பமுடியும் என அவர்கள் இந்த நிகழ்வில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மேற்குலக நாடுகள் மியான்மார் அரசுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

Rogingiya மியான்மார் தொடர்பான அனைத்துலக நீதி விசாரணைக்கு பிரித்தானியா உதவும்இதனிடையே மியான்மார் மீது கடந்த வியாழக்கிழமை (25) மேலும் பல பொருளாதார தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. மியான்மார் படையினர் ஆயுதங்களை கொள்வனவு செய்வது மற்றும் வரிப்பணத்தை வசூலிப்பது தொடர்பில் தடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

றோஹிங்கியா மக்கள் மீது 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மியான்மார் அரசு இனப்படகொலைகளை மேற்கொண்டதா என்பது தொடர்பில் அனைத்துலக நீதிமன்றத்தில் கம்பியா அரசு 2019 ஆம் ஆண்டு பதிவுசெய்த வழக்கிற்கு அனுசரணைகளை பிரித்தானியா அரசு வழங்கும் என ஆசியாவுக்கான பிரித்தானியாவின் அமைச்சர் அமந்தா மில்லிங் தெரிவித்துள்ளார்.

மியான்மாரில் இருந்து 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 740,000 பேர் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெயர்ந்திருந்தனர்.