மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்- அமெரிக்கா அறிவிப்பு

இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க  உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மியான்மரில்  இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது.   நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிசூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தியதில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் இராணுவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதில் மியான்மர் இராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் நேற்று மியான்மர் இராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.

இந்நிலையில், நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க  உள்ளதாக அமெரிக்கா  அறிவித்துள்ளது.