மாலைதீவுடன் மூலோபாய உடன்பாட்டை சீனா மேற்கொள்ளும் – சீன அதிபர்

மாலைதீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா முன்னுரிமை வழங்குவதுடன், மாலைதீவுடன் மூலோபாய உடன்பாடுகளை மேற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்படும் என சீனா அதிபர் கடந்த புதன்கிழமை(10) தெரிவித்துள்ளார்.

Maldives china மாலைதீவுடன் மூலோபாய உடன்பாட்டை சீனா மேற்கொள்ளும் - சீன அதிபர்மாலைதீவில் புதிதாக பதவியேற்ற அதிபர் மொஹமட் மொஸ்சு இந்த வாரம் சீனாவுக்கு முதல் முதலாக மேற்கொண்ட பயணத்தின்போதே சீனா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அதிபர் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பயணம் அமைந்துள்ளது. தனது நாட்டின் இறைமைக்கு இந்தியா பாதகமாக உள்ளதாக மாலைதீவின் புதிய அதிபர் குற்றம் சுமத்தியிருந்ததுடன், அங்கிருந்த இந்திய படையினரையும் வெளியேற்றியிருந்தார்.

உட்கட்டுமானம், காலைநிலைமாற்றம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பல உடன்பாடுகள் இரு நாடுகளுக்குமிடையில் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைதீவின் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு முகிகயமானது எனவும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் எனவும் மாலைதீவு அதிபர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

மாலைதீவுக்கு சீனா 1.37 பில்லியன் டொலர்களையும், சவுதி அரேபியா 124 மில்லியன் டொலர்களையும் மற்றும் இந்தியா 123 மில்லியன் டொலர்களையும் கடனாக வழங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.