அமெரிக்காவை தோற்கடித்த இந்திய – சீனா- ரஸ்யா கூட்டணி – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை(7) பங்களாதேசத்தில் இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா 5வது தடவை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஸ் தேசிய கட்சி இறுதி நேரத்தில் தேர்தலை புறக்கணித்தபோதும், தேர்தல் நடைபெற்று முடிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் முடிவுகள் வந்த சில மணிநேரத்தில் இந்தியா, சீனா, ரஸ்யா நாடுகளின் பிரதிநிதிகள் வாசையாக சென்று ஹசினாவை வாழ்த்தியுள்ளனர்.

bangala india 1 அமெரிக்காவை தோற்கடித்த இந்திய - சீனா- ரஸ்யா கூட்டணி - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இந்த வருடம் உலகில் 64 நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா, அமெரிக்கா ரஸ்யா, பங்களாதேசம், இலங்கை , தயாவான் மற்றும் பாகிஸ்த்தான் என்பவை முக்கியமானவை. ஆனால் அதில் நடந்த முதலாவது தேர்தல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கு பாதகமாகவே அமைந்துள்ளது.

இந்து சமுத்திரத்திற்கும் பசுபிக் சமுத்திரத்திற்கும் இடையிலான தொடர்புகளை கொண்டுள்ள வங்காளாவிரிகுடா இந்தோ-பசுபிக் சமுத்திரத்தின் பூகோள அரசியலில் முக்கியத்துவமிக்கது. கிழக்கு ஆசியாவுக்கான வர்த்தகத்தின் பிரதான பாதையும் அதுவே.

தனது முக்கியத்துவத்தை உணர்ந்த பங்களாதேசம் எந்த சக்திகளுடனும் அணிசேராது தனித்தே நிற்கின்றது. ஆனால் அதனை தன்பக்கம் இழுப்பதற்கு அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

2022 ஆம் ஆண்டின் தகவல்களின் அடிப்படையில் பங்களாதேசத்தின் வர்த்தக கூட்டணியில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. பங்களாதேசம் போன்ற சிறிய நாடுகளை நாம் புறக்கணிக்க முடியாது என அமெரிக்காவின் பாதுகாப்புச் சபையும் அண்மையில் தீர்மானம் கொண்டுவந்திருந்தது.

அமெரிக்காவுடன் இணைந்து பங்களாதேசத்தை தன்பக்கம் இழுப்பதற்கு யப்பானும் அமெரிக்காவுக்கு தனது உதவிகளை வழங்கியிருந்தது. மதார்பரி பகுதியில் ஆழ்கடல் துறைமுகத்தையும் அது நிர்மாணிக்க உதவியது(Bay of Bengal Industrial Growth Belt). பயங்கரவாத தடுப்பு, பாதுகாப்பு போன்ற துறைகளிலும் யப்பானும் அமெரிக்காவும் உதவ முன்வந்தன.

எனினும் சீனாவின் வர்த்தக மற்றும் பொருளாதார உதவிகளை பங்களதேசத்தால் புறக்கணிக்க முடியாத நிலை மெல்ல மெல்ல உருவாகியது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் எறத்தாள 20 பில்லியன் டொலர்கள், 31 விகித இறக்குமதிகள் சீனாவில் இருந்தே வருகின்றன.

பங்களாதேசத்து படையினருக்கான பிரதான ஆயுத விநியோகஸ்த்தர் சீனா தான். 97 விகிதமான பங்களாதேசத்தின் பொருட்களுக்கு வரிவிலக்கும் சீனா அளித்துள்ளது.

bangala china அமெரிக்காவை தோற்கடித்த இந்திய - சீனா- ரஸ்யா கூட்டணி - வேல்ஸ் இல் இருந்து அருஸ்சீனாவுடனான இந்த உறவுகளை முறியடிப்பதற்கு அமெரிக்கா ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பியது. வழமைபோல மனித உரிமை மீறல்கள், சுயாதீனத்தன்மையற்ற தேர்தல் என்ற கோசங்களை அமெரிக்காவும் அது சார்ந்த மேற்குலக மனித உரிமை அமைப்புக்களும் வலியுறுத்த ஆரம்பித்தன.

அதில் முக்கிய திருப்பமாக அமைந்தது பத்மா நதிக்கான அணை மற்றும் பாலம்  கட்டுவதில் பிரதமர் ஹசினா தலைமையிலான அரசு பாரிய ஊழல்களில் ஈடுபட்டதாக உலகவங்கி 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை தான்.

அதனை தன் மீதான சேறடிப்பாக கருதிய பிரதமர் சீனாவிடம் இருந்து நிதியை பெற்று மீதமுள்ள திட்டத்தை முடித்துவிட்டார். 3.6 பில்லியன் டொலர்கள் செலவில் 2022 ஆம் ஆண்டு நிறைவுபெற்ற இந்த திட்டத்தின் மூலம் தலைநகர் டாக்காவுடன் 21 மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன் முலம் சீனாவுக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான நெருக்கங்கள் அதிகரித்தன. இந்தியாவும் சில அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும், சீனா தான் பிரதான பங்கு வகித்தது. மேற்குலகம் மெல்ல மெல்ல காணாமல் போனது. சீனாவின் திட்டங்கள் மலிவானது என்பதும் ஒரு அனுகூலம்.

2016 ஆம் ஆண்டு பங்களாதேசம் Belt and Road Initiative (BRI) திட்டத்தில் இணைந்துகொண்டது. தொடருந்துசாலைகள், எரிசகத்தி திட்டம், துறைமுகங்கள் என சீனாவின் 17 அபிவிருதித் திட்டங்களில் பிரதமரின் அவாமி லீக் அரசு இணைந்து கொண்டது. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டுவரையிலும் 75 விகிதமான ஆயுத இறக்குமதியை சீனாவிடம் இருந்தே மேற்கொண்டது.

ஆனால் மறுவளமாக அமெரிக்காவின் பிடி இறுகியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கொள்கை ஹசினா அரசுக்கு எதிராக மாறியது. மனி உரிமை மீறல்கள் நல்லாட்சி போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயக நாடுகளுக்கான கூட்டத்துக்கு பங்களாதேசம் அழைக்கப்படவில்லை. அப்போது பங்களாதேசத்துக்கான சீன தூதுவர் உதவிகளை வழங்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த வருடம் ஜோகன்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற பிறிக்ஸ் நாடுகளின் கூட்டத்திற்கு சென்ற ஹசினா சீன அதிபர் சி ஜின்பினை சந்தித்தார். வெளிநாடுகளின் தலையீடுகளை முறியடிப்பதில் சீனா உதவும் என சீனா அதிபர் வாக்குறுதி வழங்கினார். அமெரிக்காவின் அழுத்தங்களை தவிர்க்க சீனா உதவும் எனவும் கூறினார்.

பைடன் அரசு இந்தோ- பசுபிக் கொள்கைகளை வகுத்தபோது அதில் இணைய வேண்டாம் எனவும், குவாட் அமைப்பில் சேரவேண்டாம் எனவும் சீனா தெரிவித்தது. அதனை பங்களாதேசம் பின்பற்றியது. தாய்வான் பிரச்சனை தொடர்பிலும் பங்களாதேசம் சீனாவின் கொள்கைகளைத்தான் ஆதரிக்கின்றது.

bangala அமெரிக்காவை தோற்கடித்த இந்திய - சீனா- ரஸ்யா கூட்டணி - வேல்ஸ் இல் இருந்து அருஸ்1.2 பில்லியன் டொலர்கள் செலவில் கொக்ஸ் பசார் பகுதியில் சீனா நீர்மூழ்கித்தளம் (BNS Sheikh Hasina) ஒன்றை அமைத்தது இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனினும் சீனா தமது பொருளாதார நட்பு நாடு என்று கூறி பங்களாதேசம் அதனை சமாளித்துவிட்டது.

சீனா அமைத்துள்ள வீதிகள் மற்றும் துறைமுகங்களால் இந்தியாவும் நன்மை அடைகின்றது என Imtiaz Ahmed  (Professor at the Department of International Relations at Dhaka University) தெரிவித்துள்ளார். அந்த பாதைகளை பயன்படுத்தி இந்தியா தனது பிரதான நிலப்பகுதியில் இருந்து பொருட்களை வடகிழக்கு இந்தியாவுக்கு நகர்த்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையை போல சீனாவின் கடன் பொறிக்குள் பங்களாதேசமும் வீழ்ந்துவிடும் என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆனால் அதனை மறுக்கின்றார் ஜகன்கீர் நாகர் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக உறவுகளுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியர் கசாப் ஏனம்கான், அதாவது இங்கு செலவுகளை விட அந்த திட்டங்களால் வரும் வருமானம் அதிகம், எனவே அது எப்படி கடன் சுமையாகும்? பங்களாதேசத்தின் 72 பில்லியன் டொலர்கள் கடனில் 18 பில்லியனை உலகவங்கியும், 13 பில்லியனை ஆசிய அபிவிருத்தி வங்கியும், 9 பில்லியனை யப்பானும், 5 பில்லியனை ரஸ்யாவும், 4.8 பில்லியனை சீனாவும் 1 பில்லியனை இந்தியாவும் கொண்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் 2021 ஆம் ஆண்டு பங்களாதேசத்தின் விரைவு நடவடிக்கை பற்றலியன் படை மீது அமெரிக்கா தடைகளை கொண்டுவந்திருந்தது. பின்னர் தேர்தல்களில் முறைகேடுகாளை மேற்கொள்பவர்கள் மீது பயணத்தடை கொண்டுவரப்போவதாக அமெரிக்கா கடந்த வருடம் மிரட்டியது.

ஆனால் சீனா தேர்தல் தொடர்பில் எந்த அழுத்தத்தையும் பிரதமர் மீது பிரயோகிக்கிவில்லை;.

அதேசமயம் அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியாவும் விரும்பவில்லை, அமெரிக்காவின் அதிக அழுத்தம் பங்களாதேசத்தை மேலும் எம்மைவிட்டு விலக வைக்கலாம், சீனா பக்கம் சாயவைக்கலாம் என இந்தியா அமெரிக்காவை எச்சரித்தது.

பங்களாதேசத்தின் எதிர்க்கட்சிக்கு பாகிஸ்தானின் ஆதரவுகள் உண்டு என்பது இந்தியாவின் அச்சம். எனவே அதனை பயன்படுத்தி தனக்கான ஆபத்தை அமெரிக்கா கொண்டுவரும் என இந்தியா அஞ்சியது. காலிஸ்த்தான் அமைப்பினருக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிப்பதும் இந்தியாவுக்கு அச்சத்தையே தருகின்றது.

எனவே தான் சீனா, இந்தியா, ரஸ்யா என்ற கூட்டமைப்பு அமெரிக்காவை பங்களாதேசத்தின் தேர்தலில் தோற்கடித்துவிட்டது. இந்த வருடத்தின் முதலாவது பூகோள அரசியல் தோல்வியை அமெரிக்கா சந்தித்துள்ளது. அடுத்தது அவர்களின் போட்டிக்களம் இலங்கை நோக்கி திருப்பலாம்.