மத்திய கிழக்கு கடற்படை கூட்டணியில் இணைந்தது இலங்கை

கூட்டு கடற்படை பிரிவு எனப்படும் 38 நாடுகளை கொண்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியா லைமையிலான மத்தியகிழக்கு கடற்படை கூட்டணியில் இலங்கை கடந்த மாதம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை இந்த படையணியில் இணைக்கப்பட்டது தமக்கு மிகவும் பலம் சேர்த்துள்ளதாக அந்த அமைப்பின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணி கடற்கொள்ளையை தடுத்தல், பயங்கரவாதத்தை தடுத்தல், கடல்பாதைகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடும். உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளை கொண்ட 3.2 மில்லியன் சதுரமைல் பரப்பளவுள்ள கடல்பகுதிகளை இந்த கூட்டணி பாதுகாப்பதில் ஈடுபட்டுவருகின்றது.