சர்வதேச வர்த்தகத்துக்கு புதிய தூதுவரை நியமிக்க இலங்கை அரசு முடிவு

சர்வதேச வர்த்தகத்துக்காக தனியான முழுமையான தூதரகத்தை நிறுவ இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார மாற்றச் சட்டம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை இலங்கை எட்டுவதில் இந்த தூதுவர் முக்கிய பங்காற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதுவரது நியமனம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட நிபந்தனை என்னவெனில், சர்வதேச வர்த்தகத்துக்கான தூதுவர், நான்கு வருட காலத்துக்கு நியமிக்கப்படுவார். பதவியை விட்டு அவர் வெளியேறிய பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு சர்வதேச வர்த்தகம் தொடர்பாக எந்தவொரு நிறுவனத்திலும் எந்தப் பதவியையும் வகிக்கக்கூடாது என்று சிங்கள வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.