மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பரவலை தடுக்க முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பரவலை தடுக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு நகரில் செயற்படும் இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கத்தின் ஊடாகவே இந்த செயற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த நடவடிக்கையினை இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கத்தின் முகாமையாளராக செயற்படும் ஓட்டமாவடியை சேர்ந்த முகமட் இம்தியாஸ் என்பவரே மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தமிழர்களின் வீதம் அதிகமாகவுள்ளது.அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களின் எண்ணிக்கை இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கிழக்கினைப்பொறுத்தவரையில் தமிழர்களின் தாயகமாகவுள்ளபோதிலும் அதனை முஸ்லிம்களின் தாயகமாக மாற்றுவதற்கான பல்வேறு காய்நகர்த்தல்களை மத்திய கிழக்கு நாடுகளின் நிதியுதவியுடன் கச்சிதமான முறையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

batti dr மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பரவலை தடுக்க முயற்சிஇதன் அடிப்படையில் மிகவும் திட்டமிட்ட வகையில் இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கத்தின் அலுவலகம் ஊடாக இந்த வேலைத்திட்டத்தினை முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் குறித்த சங்கத்தின் முகாமையாளராக செயற்படுபவர் சென்று குடும்ப கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிப்பதுடன் அதற்கான சிகிச்சைகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார்.

ஆத்துடன் தமிழ் இளைஞர்கள் கல்வி பயிலும் கல்வி நிலையங்களிலும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை என்னும் பெயரில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பில் தவறான பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது இவ்வாறான பிரசாரங்களுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள சில தமிழ் வைத்தியர்களும் தாதியர்களும் உடந்தையாக செயற்படுவதாகவும் இவர்களுக்கு மாதாந்தம் ஒரு தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது.