சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பரப்புரைகள்-பூமிகன்

சிறீலங்கா சனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்‌ச தன்னுடைய பிரச்சாரத்தை புதன்கிழமை அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைத்துள்ளார். ஐ.தே.க கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச கொழும்பில் தனது பிரச்சாரங்களை வியாழக்கிழமை தொடங்கி யிருக்கின்றார். இதன் மூலம் பிரச்சாரங்கள் அனல்பறக்கத் தொடங்கியிருக்கின்றது.EBx hWmU8AAzXjP சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பரப்புரைகள்-பூமிகன்

வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் அதிகமாக 35 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். ஆனால், கோத்தபாயவுக்கும் சஜித்துக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி. தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் குறைந்த பட்சம் 50 வீதம் +1  வாக்குகளை ஒருவர் பெற வேண்டும். தேர்தல் களத்தில் அதிகமானவர்கள் போட்டியிடுவதால் வாக்குகள் பிளவுபடுவதற்கும் ஒருவர் 50  வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறமுடியாமல் போவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

பிரதான இரு கட்சிகளும் சிறிய ய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஆர்வமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். 50 வீதம் +1 வாக்குகளை வேட்பாளர்கள் யாரும் பெற்றுக்கொள்ளத் தவறினால், மூன்றாவதாக வந்த வேட்பாளரின் இரண்டாவது தெரிவு எண்ணப்பட்டே முடிவு அறிவிக்கப்படும்.

பொது ஜன பெரமுனவைப் பொறுத்த வரையில் அது கூட்டணி அமைத்துள்ள கட்சிகளைப் பார்த்தால், அதிகளவுக்கு இனவாதத்தை முன்னெடுக்கும் கட்சிகள். விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிருதிவி ஹெல உறுமய கட்சி, அத்துரலிய ரத்ன தேரர் தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய போன்றன அங்குள்ளன. அதனைவிட இடதுசாரி கட்சிகள் சிலவும் இந்த முன்னணியுடன் இணைந்துள்ளன. சிறுபான்மையின கட்சிகளைப் பொறுத்த வரையில் கடந்த காலங்களில் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட கட்சிகளான ஈ.பி.டி.பி, பிள்ளையான் தலைமையிலான மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கருணாவின் கட்சி, வரதராஜப் பெருமாள் தலைமையிலான அணி, விடுதலைப் புலிகள் ஜனநாயக முன்னணி, பிரபா கணேசன் தலைமையிலான கட்சி போன்றவைதான் அங்குள்ளன.60135dbc bc34 11e9 ae68 64d74e529207 image hires 205449 சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பரப்புரைகள்-பூமிகன்

முஸ்லீம் கட்சிகளைப் பொறுத்தவரையில் அதாவுல்லாவின் அணி ராஜபக்ச தரப்புடன் நிற்கின்றது. ஆறுமுகம் தொண்டமானின் இ.தொ.காவும் கோத்தாவுக்கே ஆதரவு. அரசியல் அரங்கில் மற்றொரு முக்கிய சக்தியாகவுள்ள சுதந்திரக் கட்சி கோத்தபாயவை ஆதரிப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றது. கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் படுதோல்வி அடைந்த சுதந்திரக் கட்சி, மீண்டும் மண்ணைக் கவ்வ விரும்பவில்லை. சுதந்திரக் கட்சியில் இருந்தவர்கள்தான் தனியாகப் பிரிந்து சென்று ராஜபக்‌சக்கள் தலைமையில் பொதுஜன பெரமுனையை அமைத்திருக்கின்றார்கள். இன்று பலம்வாய்ந்த ஒரு கட்சியாக அது உருமாறியிருக்கும் பின்னணியில், சுதந்திரக் கட்சி கரைந்து போகத் தொடங்கியுள்ளது. தேர்தல் கூட்டணிக்கு சுதந்திரக் கட்சி முன்வைத்த நிபந்தனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், நிபந்தனைகள் இன்றி கோத்தபாயவை ஆதரிப்பதென்ற முடிவு கட்சியால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்குத் தேவையான 50 வீதத்தைத் தாண்டிவிட முடியும் என ராஜபக்‌ச தரப்பினர் நம்புகின்றார்கள். கடந்த 2015 சனாதிபதித் தேர்தல், கடந்த 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது தற்போதுள்ள ஆதரவுடன் தம்மால் வெற்றிபெற முடியும் என்பது அவர்களுடைய மதிப்பீடு.pikku 1 சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பரப்புரைகள்-பூமிகன்

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரையில் பல கட்சிகள் அதனுடன் இணைந்து இருக்கின்றன.  மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி,  ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், போன்ற கட்சிகள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் தமக்குக் கிடைக்கும் என சஜித் தரப்பு எதிர்பார்த்துள்ளது.

சஜித் அணியைப் பொறுத்தவரையில் பிரதான சிறுபான்மையினக் கட்சிகள் அங்கு நிற்பதுதான் அவர்களுக்குள்ள முக்கிய பலம். சிறுபான்மையின மக்களும், குறிப்பாக தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களிப்பார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில், சிங்கள வாக்குகளை இலக்கு வைத்துச் செயற்பட வேண்டியவராகவே சஜித் இப்போதுள்ளார்.

புதன்கிழமை தமது பிரச்சாரத்தை ஆரம்பித்து கோத்தபாய அனுராதபுரத்தில் நிகழ்த்திய உரை அவரை ஆதரிக்கும் சிறுபான்மை யினக் கட்சிகளை அதிரவைத்துள்ளது. தான் ஆட்சியைக் கைப்பற்றிய மறுநாளே, சிறைகளில் உள்ள படையினர் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் அவர்

அறிவித்திருக்கின்றார். சிங்கள, பௌத்த வாக்குகளை இலக்குவைத்தே இதனை அவர் கூறியுள்ளார். தடுப்பிலுள்ள

படையினரில் பெரும்பாலானவர்கள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை, கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல், கொலை போன்றவற்றில் சம்பந்தப்பட்டு ஆதாரங் களுடன் கைதானவர்கள். அவர்கள் மீது வழக்குகளும் உள்ளன.

அவர்களை விடுவிப்பதாயின் நீதிமன்றத்தின் மூலமாகவே விடுவிக்க வேண்டும். ஆனால், கோத்தபாயவின் அறிவிப்பு படையினரைப் பாதுகாக்கும் விவகாரத்தில் அவர் சட்டத்தை கைகளில் எடுப்பார் என்பதைக் காட்டுகின்றது. வழக்கு விசாரணைகள் இன்றி தடுப்பில் பல வருடங்களாக இருக்கும் தமிழ் இளைஞர்கள் விவகாரத்தை அவர் பேசவில்லை.

இதேபோல கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற தமது முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய சஜித், நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்த சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப் போவதாக அறிவித்தார். அரசியல் காரணங்கள் இந்த அறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம். ஆனால், அரசியலில் இராணுவம் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிவிட்டதை இது உறுதிப்படுத்துகின்றது.

சிங்கள வாக்குகளை இலக்கு வைத்ததாகவே இரு தரப்பினரது பிரசார உபாயங் களும் அமைந்திருக்கின்றன. சிறுபான்மையினரது பிரச்சினைகள் குறித்து தமது பரப்புரைகளில் பேசுவதை அவர்கள் தவிர்த்துக் கொள்கின் றார்கள். அது சிங்கள வாக்குகளை பாதிக்கும் என்ற அச்சம் அவர்களுக்குள்ளது. இந்த நிலையில் தமிழ்த் தரப்புக்கு அவர்கள் எந்த உறுதிமொழிகளையும் தருவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.