மட்டக்களப்பில் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்

இலங்கை அரசாங்கத்திடம் 26 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் உட்பட 16 அமைப்புகள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

IMG 8055 மட்டக்களப்பில் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த இந்த போராட்டம் காரணமாக கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் முற்றாக  முடங்கியது.

IMG 8056 மட்டக்களப்பில் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்

கோவிட் காலத்தில் அர்ப்பணிப்புமிக்க சேவையினை தாதியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் முன்னெடுத்துவரும் நிலையில், சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள ஓரு துறைக்கு மட்டுமே அனைத்து  சலுகைகளும் வழங்கப்படுவதாகவும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

IMG 8061 1 மட்டக்களப்பில் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்

அரச தாதியர் சங்கம்,அரச சுகாதார ஊழியர்கள் சங்கம் உட்பட பல சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தங்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும் தமது கோரிக்கைக்கு முறையான பதில்கள் வழங்காவிட்டால் நாடு தளுவிய ரீதியில் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை நடாத்தவேண்டிய நிலையேற்படும் எனவும்  அவர்கள் எச்சரித்துள்ளனர்.

IMG 8066 மட்டக்களப்பில் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்

இன்றைய பணி புறக்கணிப்பு காரணமாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.