போருக்கு ஆயத்தமான நிலையில் இருங்கள் சீன அதிபர் உத்தரவு

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், போருக்கான ஆயுத்த நிலையில் இருக்குமாறு சீன இராணுவத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் திடீரென உத்தரவிட்டுள்ளார்.

லடாக் மற்றும் வடக்கு கிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.  இது போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீன இராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் பிறப்பித்துள்ள உத்தரவின்படி சீன வீரர்கள், நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கு ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். வீரர்கள் பயிற்சியை அதிகரிக்க வேண்டும். எந்தவொரு மோசமான சூழலுக்கும் இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் உள்ளன.

கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா சீனா இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பல நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.