புதிய கொரோனா வைரஸை 89% எதிர்கொள்ளும் தடுப்பூசி

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு புதிய தடுப்பூசி பரிசோதனையில், அது 89.3 சதவீதம் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்திறனோடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோவாவேக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த தடுப்பூசி,  பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராக கூடுதல் செயல்திறனோடு இருப்பதாக  மருத்துவ ஆசிரியர் ஃபெர்குஸ் வால்ஷ் தெரிவித்துள்ளார் என பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனின் பிரதமர் இந்த நற்செய்தியை வரவேற்றிருக்கிறார், அதோடு நோவாவேக்ஸ் தடுப்பு மருந்தை பிரிட்டனின் மருந்து நெறிமுறையாளர்கள் மதிப்பிடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

பிரிட்டன் இந்த புதிய நோவாவேக்ஸ் தடுப்பு மருந்திலும் 60 மில்லியன் டோஸ்களை  முன் பதிவு செய்திருக்கிறது. இந்த மருந்து இங்கிலாந்திலிருக்கும் ஸ்டாக்டன் நகரில் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.