பிரித்தானியாவில் பரவிய B.1.1.7 கொரோனா வைரஸே இலங்கையை தாக்கியுள்ளது- மருத்துவர் சந்திம ஜீவந்தர

இலங்கையில்  தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவிய B.1.1.7 பிறழ்வை ஒத்ததாக இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர்  மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வைரஸ் கொழும்பு, பொரலஸ் கமுவ மற்றும் குருணாகலை பகுதிகளில் பிரித்தானியாவில் பரவும் B.1.1.7 வகையான கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக அவா் கூறினார்.

இந்தப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இது தெரியவந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.

இந்த ஆய்வு மூலம் இலங்கையில் தற்போது பரவி வருவது பிரித்தானியாவில் பரவிய பி 1.1.7 ரகத்தைச் சேர்ந்த வைரஸ் என்பது உறுதியாகியுள்ளது.

தொற்று நோய் பரவல் நாட்டில் வேகமாக அதிகரித்து வருவதற்கு இந்த வகை கொரோனா வைரஸே காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 655 ஆக உயர்வடைந்துள்ளது. நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒட்சிசனுக்கு நாட்டில் தட்டுப்பாடு இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.