பிரித்தானியாவில் உயிரிழக்கும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு 60 ஆயிரம் பவுண்ஸ்

உலகம் எங்கும் பரவி ஏறத்தாள 2 இலட்டம் மக்களை மரணமடையச் செய்துள்ள கோவிட்-19 என்ற நோய்க்கு எதிராக சுகாதரத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பெருமளவான சுகாதாரத்துறை பணியாளர்கள் மரணமடைந்து வருகின்றன. இத்தாலியில் 150 இற்கு மேற்பட்ட வைத்தியர்கள் மரணித்துள்ளதுடன், பல ஆயிரம் ஏனைய பணியாளர்களும் மரணமடைந்துள்ளனர். பிரித்தானியாவிலும் 20 இற்கு மேற்பட்டவைத்தியர்களும் 50 இற்கு மேற்பட்ட ஏனைய பணியாளர்களும் மரணித்துள்ளனர்.

இந்த நிலையில் கோவிட்-19 இனால் மரணிக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 60,000 பவுண்ஸ் (75 ஆயிரம் டொலர்கள்) வழங்க பிரித்தானியா அரசு தீர்மானித்துள்ளது.

அதற்கான அறிவிப்பை அது நேற்று (27) வெளியிட்டள்ளது.