பிரான்ஸில் கோடிக்கணக்கில் குவிந்த பணம்…!

பிரான்சில் தீக்கிரையான புகழ்பெற்ற தேவாலயத்தை மறுசீரமைக்க அந்நாட்டு கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு நன்கொடை அளித்துள்ளனர்.

தலைநகர் பாரிஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற Notre Dame தேவாலயம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி தீக்கிரையானது. இதை சீரமைக்க நன்கொடை திரட்ட திட்டமிட்டு இணையதளத்தில் பிரச்சாரம் ஒன்றை அதிகாரிகள் தொடங்கினர்.

இந்த தீ விபத்தை அடுத்து சில மணிநேரங்களில், பிரான்ஸ் கோடீஸ்வரர்களில் ஒருவரான 56 வயது Henri Pinault, தேவாலயத்தை மறுசீரமைக்க தான் நன்கொடை அளிப்பதாக பொதுவெளியில் அறிவித்தார்.

பொது வெளியில் நிதியளிப்பதை அறிவிப்பதின் மூலம் பலரை நன்கொடை அளிக்க ஊக்குவிக்கும் என Henri Pinault-ன் தந்தை 82 வயதான Francois Pinault கூறினார்.

Gucci மற்றும் Yves Saint Laurent உள்ளிட்ட பிராண்டுகள் அடங்கிய பாரிஸைச் சேர்ந்த ஆடம்பரக் குழுவான Kering-ன் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான Henri Pinault மற்றும் அவரது 82 வயதான தந்தை செவ்வாயன்று தேவாலயத்திற்கு நன்கொடை அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தேவாலயத்தை மறுசீரமைக்க சுமார் 109 மில்லியன் டொல்ர் நன்கொடையாக அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து, Henri Pinault-ன் போட்டியாளரான பிரான்ஸ் கோடீஸ்வரர்களில் ஒருவரான Bernard Arnault 218 மில்லியன் டொலர் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.