பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் விஷேட பாதுகாப்பு – நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு

6 பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் விஷேட பாதுகாப்பு - நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏற்பாடுநோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களை அண்மித்து விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பிரகாரம், பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கமைய, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய பள்ளிவாசல்களின் மௌலவிகளை சந்தித்து, இந்த விசேட வேலைத்திட்டம் தொடர்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், நாடு முழுவதும் உள்ள 3203 பள்ளிவாசல்களில் துஆ பிரார்த்தனை இடம்பெறும் 2453 பள்ளிவாசல்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 5580 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 510 பேரும் முப்படையின் 1260 பேரும் உள்ளடங்கலாக 7350-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.