பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே  சிதறி விழுந்த விமானத்தின் பாகங்கள்

அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தின் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடுவானில் இன்ஜின் செயலிழந்ததால், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வருக்கு அருகில், குடியிருப்புப் பகுதியில் அந்த விமானத்தின் இன்ஜின் பாகங்கள் சிதறி விழுந்தன.

நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே சிதறி விழுந்த விமானத்தின் பாகங்கள்

எனினும், போயிங் 777 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் இருந்த 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கினர்.

யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.