சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது – பிரித்தானியா

சிறீலங்கா அரசு ரோம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லாததால் அதனை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கடந்த 16 ஆம் நாள் எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை தமிழ்நெற் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா மற்றும் சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் ஆகியோருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

சிறீலங்கா அரசு ரோம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்புநாடாக இல்லாததால் அதனை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது.

அதனையும் மீறி நிறுத்துவதானால் சிறீலங்கா அரசு குற்ற விசாரணையை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஐ.நா பாதுகாப்புச் சபை பரிந்துரை செய்ய வேண்டும்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையானது தோற்கடிக்கப்படும் சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளது. எனவே நீங்கள் உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டது போல அனைத்துலக குற்றவியல் நீதிமன்னத்திற்கு சிறீலங்காவை பரிந்துரை செய்வது என்பது சாத்தியமற்றதொன்று என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.