பதவி விலகுமாறு ரணிலிடம் மன்றாடும் அமைச்சர்கள்

சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் படுதோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு பல அமைச்சர்கள் கேட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பலர் நேற்று தமது பதவிகளை துறந்துள்ள நிலையில் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று தனது பதவியை துறந்துள்ளார்.

கோத்தபாயாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா நேற்றே கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில் ரணில் தனது பதவியை தக்கவைக்க போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களான ராவுப் கக்கீம், மங்களா சமரவீரா, நவீன் திஸநாயக்கா மற்றும் சம்பிக்க ரணவக்கா ஆகியோரே ரணிலிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இதனிடையே, பிரதமர் பதவி தொடர்பில் தான் கோத்தபாயாவுடன் பேச்சுக்களை இன்று (18) மேற்கொள்ளப்போவதாக ரணில் தெரிவித்துள்ளார்.