பதுளை – பசறை – ஹொப்டன் தோட்டப் பகுதியில் தரிசு நிலத்தில் முன்னாள் தொழிலாளி ஒருவரால் நடப்பட்ட பாக்கு மரங்கள், நூற்றுக்கும் அதிகமான தேயிலை செடிகள் மற்றும் தவறணையில் இருந்த 300 செடிகள் வெட்டி வீசப்பட்டுள்ளன.
சுமார் 10 வருடங்கள் முன்பாக நடப்பட்ட மரங்களே இவ் வாறு வெட்டி வீசப்பட்டுள்ளன. தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளர் உள்ளிட்டோர் நேரடியாக இந்த அராஜகத்தை செய்துள்ளனர்.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை ஏற்க லுணுகலை பொலிஸ் மறுத்துள்ளது. ஏற்கனவே மலையகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இவ்வாறான அராஜக சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.



