நிலைமாறுகால நீதி விவகாரம்; இலங்கையின் அணுகுமுறைக்கு ஐ.நா. விஷேட அறிக்கையாளர் கண்டனம்

நிலைமாற்று காலநீதி விவகாரத்தை இலங்கை கையாண்ட விதம் குறித்து ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உண்மையை ஊக்குவித்தல், நீதிமற்றும் இழப்பீடுகள் மீளநிகழாமைக்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டிகிரெவ் நிலைமாற்றுக் காலநீதி விவகாரத்தினை இலங்கை கையாண்டுள்ள விதம் குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்திடம் காணப்படும் அர்ப்பணிப்பின்மையை தவிர இலங்கையில் நிலைமாற்றுக்கால நீதி செயற்பாடுகளுக்கு வேறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐநா மனித உரிமை பேரவையின் அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிலைமாற்றுக்கால நீதிதிட்டங்களை வடிவமைத்து முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கம் மிகவும் மந்தகதியில் செயற்பட்டுள்ளதுடன் மாத்திரமின்றி தனது செய்தியில் தடுமாறியுள்ளதுடன் இதுவரையில் அந்த செயற்பாட்டிற்கான முழு உரிமையை எடுக்கதவறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் ஐநாவின் விசேட அறிக்கையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக காணப்படுகின்ற வழக்குகளை அரசாங்கம் உடனடியாக கையாளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.